ஹமாஸ் பணய கைதி இலங்கையர் உயிரிழந்துள்ளார்!





ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சுஜித் யடவர பண்டார என்ற இலங்கையரே உயிரிழந்துள்ளதாக  இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலிலேயே சுஜித் யடவர பண்டார உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் சுஜித் யடவர பண்டார என்பதை உறுதி செய்துக்கொள்ளும் வகையில், அவரது பிள்ளைகளின் DNA மாதிரிகளை ஒத்துப் போவதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தினார்கள் என அவர் கூறினார்.

No comments