இனப்படுகொலை இஸ்ரேலுக்கு எதிராக மூன்று பாலஸ்தீனிய உரிமைக்குழுக்கள் வழக்குப் பதிவு!!

மூன்று பாலஸ்தீனிய உரிமைக் குழுக்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) வழக்குத் தொடுத்துள்ளன, "இனவெறி" மற்றும் "இனப்படுகொலை" தொடர்பாக இஸ்ரேலை விசாரிக்கவும், இஸ்ரேலிய தலைவர்களுக்கு கைது செய்ய பிடியாணை வழங்கவும் வலியுறுத்துகிறது.

மனித உரிமை அமைப்புகளான அல்-ஹக், அல் மெசான் மற்றும் பாலஸ்தீனிய மனித உரிமைகள் மையம் ஆகியவற்றால் நேற்று புதனன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, காசா பகுதிக்குள் மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்வது குறித்து அவசர கவனம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. காசா சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, 10,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.  அவர்களில் பாதி பேர் குழந்தைகள் என்று கூறப்பட்டுள்ளது.

காசா மீது மூச்சுத் திணறல் முற்றுகை, அதன் மக்களை வலுக்கட்டாயமாக இடப்பெயர்வு செய்தல், நச்சு வாயு பயன்பாடு மற்றும் உணவு, தண்ணீர், மின்சார மற்றும் எரிபொருள் தடை போன்ற தேவைகளை நிராகரித்தல் போன்றவற்றின் மூலம் அதன் தற்போதைய போர்க்குற்ற விசாரணையை விரிவுபடுத்துமாறும் அந்த ஆவணம் சர்வதே நீதிமன்றைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தச் செயல்கள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உட்பட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று வழக்கில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று மூன்று குழுக்களும் விரும்புகின்றன.

சர்வதேச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் அலுவலகம் (OTP) 2021 இல் பாலஸ்தீனத்தின் நிலைமை குறித்து உத்தியோகபூர்வ விசாரணையைத் தொடங்கியது. பாலஸ்தீனிய மற்றும்  கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா பகுதி உட்பட மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் போர்க்குற்றங்கள் நடந்துள்ளன அல்லது செய்யப்படுகின்றன.

எவ்வாறாயினும், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு அதன் பதில் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பதாக கூறும் உரிமைக் குழுக்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து இந்த குழு விமர்சனங்களை எதிர்கொண்டது.

அண்மையில் ஐசிசி மனு தாக்கல் செய்ததில், உரிமைக் குழுக்களின் வழக்கறிஞர் இம்மானுவேல் தாவூத், உக்ரைனில் போர்க்குற்றங்களுக்காக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக ஐசிசியின் தீர்ப்பைக் குறிப்பிட்டு சர்வதேச நீதியில் இரட்டை நிலைக்கு இடமில்லை என்றார்.

உக்ரைனிலோ அல்லது பாலஸ்தீனத்திலோ போர்க்குற்றங்கள் நடந்தாலும், குற்றவாளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்  என்று தாவூத் கூறினார்.

காசாவில் ஒரு மாத காலப் போரின் போது இஸ்ரேலுக்கு எதிரான கோப்பு ஐசிசிக்குக் கொண்டுவரப்படுவது இது முதல் முறையல்ல.

அக்டோபர் 31 அன்று, காசாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர்க்குற்றங்களை இழைத்ததாக எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) அமைப்பிடம் மறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்கள் குறைந்தது 39 பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ளன, பத்திரிகை சுதந்திரக் குழுவின் (CPJ) புள்ளிவிபரங்களின்படி, அவர்களில் 34 பாலஸ்தீனியர்கள், நான்கு இஸ்ரேலியர்கள் மற்றும் ஒருவர் லெபனானியர்.

ஐசிசி வழக்கறிஞர் கரீம் கான், அக்டோபர் 29 அன்று எகிப்தின் ரஃபா எல்லைப் பகுதிக்குச் சென்றபோது கூடுதலான குற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.

மனிதாபிமான உதவி பொதுமக்களைச் சென்றடைவதைத் தடுப்பது ரோம் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படலாம் என்றார்.

குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள், பொதுமக்களுக்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்கள் செல்வதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று கான் கூறினார்.

அவர்கள் அப்பாவிகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிமைகள் உள்ளன. இந்த உரிமைகள் ஜெனீவா உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த உரிமைகள் ரோம் சட்டத்தின் கீழ் குறைக்கப்படும்போது குற்றவியல் பொறுப்பையும் கூட உருவாக்குகின்றன.

ஐசிசியில் உறுப்பினராக இல்லாத இஸ்ரேல், முன்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பை நிராகரித்தது மற்றும் நீதிமன்றத்துடன் முறையாக ஈடுபடவில்லை.

ஐசிசியின் ஸ்தாபக ரோம் சட்டமானது, உள்நாட்டு அதிகாரிகள் "விருப்பமின்றி அல்லது இயலாமல்" இருக்கும் போது, ​​அதன் உறுப்பினர்களின் அல்லது அவர்களது நாட்டவர்களால் குற்றஞ்சாட்டப்படும் குற்றங்களை விசாரிக்க சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கிறது.

அக்டோபர் 10 அன்று, ஐசிசியின் வழக்கறிஞர் அலுவலகம், தற்போதைய மோதலில் செய்யப்பட்ட சாத்தியமான குற்றங்களுக்கு அதன் ஆணை பொருந்தும் என்று கூறியது.

No comments