யாழ்.பல்கலை பிரதான வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்


யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாட மாணவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு சாதகமான பதில் கிடைக்காத நிலையில் மாணவர்களால் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு போராட்டம் இடம்பெற்றது.

No comments