யாழில் நிலவும் சீரற்ற காலநிலை - 07 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் பாதிப்பு


யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவும் சீரற்ற கால நிலை காரமாக 07 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளதுடன் , 07 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி கிழக்கு பகுதியிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 2023ஆம் ஆண்டில் நேற்றைய தினம் புதன்கிழமை வரையிலான காலப்பகுதியில் 836.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 8.11 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.  


No comments