நினைவேந்த தடை தாண்டிய ஓட்டம்!
மாவீரர் தினத்திற்கு தமிழர் தேசம் தயாராகிவருகின்ற நிலையில் மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை இலங்கை காவல்துறை இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று நினைவு தூபியை காவல்துறையினர் இடித்து தள்ளியுள்ளனர்.
முன்னதாக தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்திருந்தனர்.
இதனிடையே கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் (22) புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் அவ்விடத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கட்டப்பட்ட நினைவுக் கொடிகள் அறுத்து எறியப்படவில்லை என மற்றொரு சாராரே குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
அதேவேளை திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில், நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, 17 பேருக்கு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையுத்தரவினால் நினைவேந்தல் செயற்பாடுகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது என்பதனால் யாரும் குழப்பமடையவோ அச்சமடையவோ தேவையில்லை என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே இலங்கையிலிருந்து புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும் துடிப்புடன் உள்ளார்கள், செயற்படுகிறார்கள். இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா என முன்னாள் படையதிகாரி சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment