யாழில். கடமையாற்றும் பொலிஸாருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் கண்பார்வை குறைபாடுடைய பொலிசாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள குறித்த கண்ணாடி வழங்கும் நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்படவுள்ளது.

No comments