யாழில் வீட்டின் புகைக்கூட்டின் ஊடாக புகுந்த திருட்டு


வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளது. 

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை புகுந்த கும்பலே திருட்டில் ஈடுபட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

அதன் போது , திருட்டு கும்பல் வீட்டின் புகைக்கூட்டின் ஊடாகவே வீட்டினுள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டு உள்ளதாகவும் , தடயங்களின் அடிப்படையில் வீட்டினுள் இருவர் நுழைந்து இருக்கலாம் , வேறு சிலர் வீட்டின் வெளியே பாதுகாப்புக்கு நின்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 


No comments