ஹர்த்தால் :முற்றாக முடங்கிபோயிருந்தது!



தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்தினால் வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக முடங்கிபோயிருந்தது. அதே வேளை தனியார் போக்குவரத்துச்சேவைகளும் முடங்கியிருந்த போதும் அரச போக்குவரத்து சேவைகள் வழமை போல நடந்திருந்தது.

எனினும் பிரதான நகரங்களில்; வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வர்த்தக சமூகங்கள் வழங்கியிருந்தன. அதனால் நகரங்கள் முற்றாக முடங்கியுள்ளது.  

தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கிய வேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபட்டன.

இதனிடையே ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி பாடசாலை தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

காலை முதல் பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவது தொடர்பில் குழப்பங்கள் காணப்பட்டது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்ததாக இருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்தும் கிழக்கில் கால்நடை மேய்ச்சல் தரைகள் சுவீகரிக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments