இஸ்ரேல் - காசா செய்தித் துளிகள்!!

  • காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை 4,137 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 1,661 குழந்தைகள் உள்ளனர்.13,260 பேர் காயமடைந்துள்ளனர். 720 குழந்தைகள் உட்பட காணாமல் போனவர்கள் குறித்து அதிகாரிகள் 1,400 விசாரணைகளைப் பெற்றுள்ளனர்.

  • மருத்துவமனைகள் மீதான இஸ்ரேல் தாக்குதல்களை அடுத்தும், மின்சாரம் இன்மை, எரிபொருள் இன்மை, மருத்துத் தட்டுப்பாடு என பல தடைகளாலும் பல மருத்துவமனைகள் செயலிழந்துள்ளன.

  • காசாவில் காயமடையும் பாலஸ்தீனியர்களுக்கு மருத்துவமனைகளின் தரைகளில் , சாதாரண நிலத்திலும், தாழ்வாரங்களிலும் வைத்தே சத்திரசிகிற்சைகள் நடைபெறுகின்றன.கிருமி தொற்று நீக்கி மருத்துகள் இல்லாமையால் சமையலுக்குப் பயன்படுத்தும் விநிகர் பயன்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். 

  • காசாவில் இயங்கி வந்த ஏழு முக்கிய மருத்துவமனைகள் மற்றும் 21 சுகாதார மையங்கள் இப்போது சேவையில் இல்லை.

  • மருத்துவக் குழுவைச் சேர்ந்த 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 23 ஆம்புலன்ஸ்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.

  • ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 கிறிஸ்தவ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் நேற்று வியாழக்கிழமை அன்று கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 கிறிஸ்தவ பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 500 முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இஸ்ரேலிய குண்டுவீச்சிலிருந்து தேவாலயத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    காசா நகரில் உள்ள அதன் தேவாலய வளாகத்தைத் தாக்கிய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்கு ஜெருசலேமின் ஆர்த்தடாக்ஸ் பேட்ரியார்ச்சேட் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

  • இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் இருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இருந்து சுமார் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த அகதிகள் முகாமில் இருந்து நேற்றிரவு மட்டும் குறைந்தது 10 பேர் இஸ்ரேலியப் படைகளால் கைது  செல்லப்பட்டனர்.

  • இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் அதன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு டஜன் பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டதாகவும் கூறுகிறது.

    952 இல் நிறுவப்பட்ட நூர் ஷம்ஸ் அகதிகள் முகாம், துல்கரேமில் உள்ள இரண்டில் ஒன்றாகும், இது 1948 நக்பா அல்லது சியோனிச போராளிகளால் பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்புக்குப் பிறகு ஹைஃபா பகுதியில் இருந்து பாலஸ்தீனிய அகதிகளை தங்க வைப்பதற்காக கட்டப்பட்டது.

No comments