இஸ்ரேல் பிரதமர் வீடு செல்ல வேண்டும்: கருத்துக் கணிப்பில் இஸ்ரேல் மக்கள் தெரிவிப்பு


80 சதவீத இஸ்ரேலியர்கள் பிரதமர் பெஞ்மின் நெதன்யாகு வெளியேற வேண்டும் என்று கருதுவதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இஸ்ரேலிய நாளிதழான Maariv இன் புதிய கருத்துக் கணிப்பில் 65 சதவிகித இஸ்ரேலியர்கள் காசா பகுதியில் தரைவழித் தாக்குதலை ஆதரிப்பதாகவும், 21 சதவிகிதத்தினர் எதிர்ப்பதாகவும் கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலில் பிரதமரின் லிகுட் கட்சிக்கு வாக்களித்தவர்களில் 69 சதவீதம் பேர் உட்பட அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நாட்டின் தோல்விகளுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொறுப்பேற்க வேண்டும் என்று 80 சதவீத இஸ்ரேலியர்கள் நம்புவதாகவும் கருத்துக்கணிப்பு பரிந்துரைத்தது. 8 சதவீத பொது மக்கள் மட்டுமே அவர் [நெதன்யாகு] பொறுப்பல்ல என்று நினைக்கிறார்கள்.

பெஞ்சமின் நெதன்யாகு உலகத் தலைவர்களைச் சந்திக்கும் ஒரு உலகளாவிய அரசியல்வாதி என்று அவர் காட்ட முயற்சித்தாலும், இஸ்ரேலில் உள்ள பொதுமக்கள் நெதன்யாகு வீடு செல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறார்கள்.

மேலும், 51 சதவீத இஸ்ரேலியர்கள், லெபனானுடனான இஸ்ரேலின் எல்லையில், வடக்குப் பகுதியில் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.

Panel4All உடன் இணைந்து Lazar இன்ஸ்டிட்யூட் மூலம் அக்டோபர் 18 மற்றும் 19 திகதிகளில் கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

No comments