புத்தூரில் கிளைமோர்!

 


புத்தூர் பகுதியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புத்தூர் சந்தியில் இருந்து சாவகச்சேரி வீதிக்கு செல்லும் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள வயல் வெளிக்குள் இருந்தே இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கிளைமோர் இருப்பதாக பொதுமக்களால் பொலீஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த சாவகச்சேரி பொலீஸாரால்  இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

No comments