ஆமி குறைப்பு:சஜித் எதிர்ப்பு!

 



இலங்கை படைகளிற்கு அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி வழங்க எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவ வீரர்கள் உட்பட யுத்தத்தை முன்னெடுத்த அனைவருக்கும் அன்றும் இன்றும் நாளையும் தாம் மரியாதை செலுத்துவதாகவும், யுத்தத்தினால் அங்கவீனமானவர்களை கேலி செய்தால் அது கேவலமான செயலாகும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவிததுள்ளார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் வெட்டப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், நிவாரணத்தை குறைத்தால் மாற்று வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தால் வெட்டப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுத்த அவர் அங்கவீனமான இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


No comments