காணித்துண்டு பிச்சை?



 முல்லைதீவு குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையினை காப்பாற்ற தமிழ்களிற்கு சிவன் ஆலயம் அமைக்க 3ஏக்கர் காணியினை வழங்கும் அரசின் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் குருந்தூர்மலைக்கு களவிஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்,மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்,தொல்பொருள்திணைக்கள உயர் அதிகாரிகள்,வனவளத்திணைக்கள உயர்அதிகாரிகள்,வனஜீவராசிகள் திணைக்கள உயர் அதிகாரிகள்,காணி தொடர்பிலான திணைக்கள உயர் அதிகாரிகள்.கமநலசேவை திணைக்கள உயர் அதிகாரிகள்,விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பயணம் மேற்கொண்டு கள ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த மாதம் இறுதியில் குருந்தி ரஜமஹா விகாரை அமைந்துள்ள தொல்பொருள் காப்புப் பகுதிக்கு சொந்தமில்லாத   காணியில் இருந்து 3 ஏக்கர் காணியை ஒதுக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்  சோமரத்ன விதானபத்திரண முன்மொழிந்துள்ளார்.

பௌத்த விகாரை மற்றும் இந்து ஆலயம் மற்றும் பொது வசதிகளுக்காகவும் அமைப்பதற்கும் இந்த காணியை ஒதுக்குமாறு, இளைஞர் பாரம்பரியம் மற்றும் நவீன குடிமக்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு முன்மொழிந்துள்ளார்.


No comments