காங்கேசன்துறை காணிக்கு கனடா வரை சண்டை!

 


யாழ்.கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்த பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து தமிழனுக்கே குத்தகைக்கு வழங்கி பணமீட்டும் தந்திரம் சிங்கள அரசிடம்  மட்டுமே இருக்கிறது. காணி உரிமையாளர்கள் தொடர்பில் சிங்கள அரசும் கவனத்தில் எடுக்கவில்லை, அதனை குத்தகைக்கு எடுக்கும் புலம்பெயர் தமிழனும் கவனத்தில் எடுக்கவில்லையென கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உண்மையில் ஜனாதிபதி மாளிகையை பெற்றுக்கொள்வதில் கனடா புலம்பெயர் தமிழர்கள் குடுமிச்சண்டையில் குதித்திருந்தனர். 

இந்நிலையில் யாழ்.காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையானது தகவல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சுமார் 50 வருடங்களுக்கு கனடா வாழ் புலம்பெயர்  தமிழருக்கு  குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 

இதன் முதலீட்டு மதிப்பு அண்ணளவாக 5000 பில்லியன் ரூபாய்கள். கனேடிய முதலீட்டாளரான இந்திரகுமார் - பத்மநாதன் உடன் இணைந்து இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இதனை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக அபிவிருத்தி செய்யவுள்ளது. 

எனினும் கனேடிய இன்னொரு தரப்பு ஜனாதிபதி மாளிகையில் ஹோட்டல் அமைக்க கும்பலாக அலைந்து திரிந்து ஏமாற்றமடைந்துள்ளது.

இந்நிலையில் தமது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு உயர்பாதுகாப்பு வலய விடுவிப்பு கதையுடன் பிரச்சாரங்களில் குதித்துள்ளதாக கூறப்படுகின்றது.


No comments