பெல்ட் & ரோடு மன்றத்தில் இந்தோனேசியா?இந்து சமுத்திரத்தின் அடையாளத்தை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (17) பெய்ஜிங்கில் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான பெல்ட் & ரோடு மன்றத்தில் பங்கேற்க இரு தலைவர்களும் சீனா சென்றுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான விவாதங்களில் ஈடுபட்டனர்.

No comments