காசா மருத்துவமனை மீது தாக்குதல்: 500க்கு மேல் மக்கள் பலி

  • காசா மீதான ரஷ்ய தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை கண்டிக்கும் ரஷ்ய தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது.

  • சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொசாம்பிக் மற்றும் காபோன் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ரஷ்யாவுடன் சேர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித்தன.

  • இதற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் வாக்களித்தன.மற்ற ஆறு நாடுகள் வாக்களிக்கவில்லை. தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் குறைந்தபட்சம் ஒன்பது "ஆம்" வாக்குகள் தேவை.

  • இஸ்ரேல் மீது நடந்த ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பதிலடியாக, 11-வது நாளாக வான், தரை மற்றும் கடல் வழியாக இஸ்ரேல் பாதுகாப்பு படையும் தாக்குதலை நடத்தி வருகிறது. மறுபுறம், மேற்குக் கரையில் உள்ள ஜெரிக்கோ, கிழக்கு ஜெருசலேம், நப்லஸ், பெத்லஹேம், ஹெப்ரான் உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்களை நோக்கியும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

  • காசா முனை பகுதியில் ராணுவ மற்றும் அரசியல் கட்டுப்பாட்டை கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பை நீக்குவது என்பதே போரின் இலக்கு என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

  • காஸாவை கைப்பற்றி ஹமாஸ் தலைமையை ஒழிக்க இஸ்ரேல் 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், காஸாவை கைப்பற்றும் முடிவு மிகப்பெரிய தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் 5 நிமிடத்துக்கு ஒரு உயிர் போவதாக தெரிவித்துள்ளது பாலஸ்தீனம்.

  • அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி லெபனானில் இருந்து 9 ராக்கெட்டுகளை தங்கள் எல்லைக்குள் வீசப்பட்டதாக கூறியுள்ளது, இஸ்ரேல் ராணுவம்.

  • போராளிகளுக்கு உதவி செய்த பாலஸ்தீனர்கள் 330 பேர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

  • காஸாவுக்கு இஸ்ரேலிய படைகள் புகுந்தால் அதற்கு பிறகு ஏற்படும் சூழலையும் போர் பரவுவதையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று ஈரான் எச்சரித்துள்ளது.

No comments