ஏமன் நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதலை நடத்திய ஹவுதி போராளிகள்


இஸ்ரேல் மீது ஏமன் நாட்டிலிருந்து ஹவுதி போராளிகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கு  ஹவுதி  போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் இஸ்ரேலை நோக்கி ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதலை நடத்திய  ஹவுதி அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த டிரோன் தாக்குதல்கள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஈலாட் (Eilat) என்ற இடத்தை நோக்கி நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட தேச விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

No comments