காசாவுக்குள் தொடங்கியது நேரடி மோதல்: இரு தரப்புக்கும் இழப்புகள்??


காசாவில் தீவிரமான சண்டை நடைபெற்று வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இது தெருவுக்கு தெரு சண்டைகள் மட்டுமல்ல, இது நேருக்கு நேர் நடைபெறும் மோதல் என்று விவரிக்கப்படுகிறது. 

இஸ்ரேலியப் படைகள் தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்னர் முதன்முறையாக காசா நகரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லாஹியா கிராமத்தை கடந்து, இப்போது காசா நகரின் அல்-நஸ்ர் தெரு எனப்படும் முக்கிய சாலைகளில் ஒன்றில் இஸ்ரேல் படையினர் நிற்கின்றனர்.

காசா நகரின் விளிம்பில் அல்லது புறநகரில் நுழைந்த இஸ்ரேலிய துருப்புக்களுக்கும் ஹமாஸ் போராளிளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மாறி மாறி இரு தரப்பும் துப்பாக்கிச் சூட்டை நடத்துகின்றனர்.

இரு தரப்பினர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி தெரிவிக்கின்றனர்.

டசின் கணக்கான ஹமாஸ் போராளிகள் பலர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கண்காப்பு இடங்கள் அழிக்கப்பட்டதாகவும் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு கூறிகிறது.

இதேநேரம் ஹாசாவுக்குள் நுழைய முற்பட்ட இஸ்ரேலியப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இரு வாகனங்கள் மற்றும் டாக்கி ஒன்றும் அழிக்கப்பட்டதாகவும் ஹமாஸ் கூறுகிறது. அத்துடன் இஸ்ரேல் படைகள் நோக்கி மோட்டார் மற்றும் கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

No comments