யப்பானில் வீசியதை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணு குண்டு எங்களிடம் உள்ளது - அமெரிக்கா


இரண்டாவம் உலகப் போரின் போது அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தை யப்பான் தாக்கியத்திற்கு பதிலடியாக யப்பான் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இதில் ஹிரோஷிமாவில் வீசிய அணு குண்டின் சக்தியை விட 24 மடக்கு சக்கி வாய்ந்த குண்டை வைத்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க பாதகாப்புத் துறையின் அறிவிப்பில் பெண்டகன் இதனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளிக் கொள்கைக்கான பாதுகாப்பு செயலாளர் ஜான் பிளம்ப் இதை உறுதி செய்திருக்கிறார். 

இந்த அணு குண்டுக்கு B61-13 என பெயரிடப்பட்டுள்ளது. இது வெடித்தால் நாகாசாகியில் போடப்பட்ட அணுகுண்டை விட 14 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பென்டகன் கூறியுள்ளது. 

நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த குண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தரையில் விழுந்த பின்னர் வெடிப்பதற்கு பதிலாக, தரையை தொடுவதற்கு முன்னரே அது வெடித்துவிடும். இது வெடித்தால் குறைந்தபட்சம் 3.5 கி.மீ பரப்பில் எல்லாம் உரு தெரியாமல் அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments