உண்மைகளைப் போட்டு உடைக்கும் அல் ஜசீரா: தடை போட்டது இஸ்ரேல்


அல் ஜசீரா ஊடகத்திற்கு தடை விதித்துள்ளது இஸ்ரேல். பாலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனித நேயத்திற்கு எதிரான போரை புட்டுப் புட்டு உண்மை வெளிப்படுத்துவதால் அந்த ஊடகத்திற்கு இன்று முதல் இஸ்ரேலில் தடை விதித்துள்ளது.

இதனால் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையம் மற்றம் சமூக ஊடகங்களை இன்று முதல் இஸ்ரேலில் பார்வையிட முடியாது. இஸ்ரேலுக்கு எதிரான பரப்புரை ஊடகமாக இருப்பதால் அதை தடை செய்வதாக இஸ்ரேல் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது.

குறிப்பாக பாலஸ்தீனிய மக்கள் மீது இஸ்ரேல் ஏவிவிடும் மாநிடத்திற்கு நேயத்திற்கு எதிரான போர்க் குற்றங்களை நியாயப்படுத்துவதில் மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இஸ்ரேலும் தங்களது செயற்பாடுகளை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலையில் பரப்புரைகளை செய்கிறது. இந்நிலையில் அல் ஜசீரா ஊடகம் பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மைகளைப் போட்டு உடைப்பதால் இஸ்ரேலுக்கு இது பெரும் தர்மசங்கடமாக உள்ளது. 

நடுநிலைமை என்று கூறிக்கொண்டு பி.பி.சி , சிஎன்என், ரொயிற்றர், ஏபி, யூரோ நியூஸ், பிரான்ஸ் 24 என பல ஊடகங்கள் மேற்கு நாடுகளையும் இஸ்ரேலையும் எவ்வாறு ஆதரிக்கிறதோ அதேபோன்று அல் ஜசீரா தொலைக்காட்சியும் அரபு தேசத்தில் பரப்புரை ஊடகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments