இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டவை - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்


காசா மீது இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் முற்றுகை என்பன கண்டிக்கத்தக்கது என்றும் இவை சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.

2007 ஆண்டும் காசா மீது வான் மற்றும் கடல் முற்றுகையை இஸ்ரேல் விதித்தது. இதனால் பாலஸ்தீனியர் சுதந்திரமாக காசாவை விட்டு வெளியேற முடியவில்லை.

கடந்த சனிக்கிழமை காலை ஹமாஸின் திடீர் தரை மற்றும் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை அதிகரித்ததால் காஸா மீதான குண்டுவீச்சுகள் ஒரே இரவில் தீவிரமடைந்தன.

ஆயிரம் வரையான மக்கள் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமநை்துள்ளனர். மருத்துவமனை, அகதிகள் முகாம் மக்கள் குடியிருப்புகள், பல்கலைக்கழகம், வங்கி, தொலைத்தொடர்பு கோபுரங்கள், வழிபாட்டுத்தலங்கள் குண்டு வீசி தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

26 இலட்சம் பேர் வாழும் காசா மீது உணவு, மருந்து, குடி தண்ணீர், மின்சாரம், தொலைத்தொடர்பு, எரிபொருள், இன்ரநெட் என அனைத்து விநியோகங்களும் இஸ்ரேலியப் படைகள் தடை செய்துள்ளன. இது பாரிய மனித உரிமை மற்றும் போர்க் குற்ற மீறலாகும்.

No comments