காசாவில் மில்லியன் கணக்கானவர்களுக்குக் கூட்டுத் தண்டனை - ஸ்கொட்லாந்து முதலசைச்சர்
இஸ்ரேலியப் படைகளால் முற்றுகைக்குள்ளாகிய காசாப் பகுதியில் மக்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்லவும், மக்களை வெளியேற்றவும் ஒரு மனிதாபிமான நடைபாதையை திறக்குமாறு ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் ஹம்சா யூசுப் அழைப்பு விடுத்துள்ளார்.
இவர் ஒரு பாலஸ்தீனியப் பெண்ணை மணம் முடித்தவர். இவரது மாமியார் காசாப் பகுதியில் சிக்கியுள்ளார். இந்நிலையில் அங்குள்ள நிலைமைகளை தனது மாமியாரிடம் பெற்றதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது நிலமை முற்றிலும் மோசமானது. அதனால் தான் அதனால்தான் காசாவிற்குள் முக்கிய பொருட்கள் வருவதற்கும், காசாவிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் அனுமதிக்கும் வகையில் மனிதாபிமான நடைபாதை அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த 24 மணிநேரமாக நான் அழைப்பு விடுத்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஏன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டாலும் இரண்டு மில்லியன் மக்களின் கூட்டுத் தண்டனையாக விலை இருக்க முடியாது என்று யூசப் மேலும் கூறினார்.
Post a Comment