இஸ்ரேல் - ஹமாஸ் போர்: யார் யாருக்கு ஆதரவு??

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

ஆனாலும் இப்போரில் எந்தவித யுத்த விதிகளையும் பின்பற்ற முடியாது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்திவருகிறது. வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசுவிறது.

காசா எல்லா வகையிலும் முற்றுகையிடப்பட்டுள்ளது. காசாவில் வாழும் 26 இலட்சம் மக்களுக்கும் உணவு, நீர், மின்சாரம், எரிபொருள், தொலைத்தொடர்பு, இன்ரநெட் என அனைத்தை விநியோகங்களையும் இஸ்ரேல் துண்டித்துள்ளது என வெளிப்படையாக அறிவித்துள்ளது.


இஸ்ரேலின் மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றகளை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன.

காசாவில் இருந்து பாலஸ்தீனிய மக்கள் வெளியேறுவதற்காக இருக்கும்  எல்லையை எகிப்து மூடியுள்ளது. எகிப்தும் அமெரிக்கா சார்பு நிலையில் உள்ளது.

இதேபோன்று ஜோர்டானும் அமெரிக்கா சார்பு நிலையில் உள்ளது. இங்கு அமெரிக்க விமானப் படைத்தளங்கள் உள்ளன.

அமீரகம் (ஐக்கிய அரபு எமிரேட்) வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.

பஹ்ரைனும் இஸ்ரேலுக்கு ஆதரவைத் தொிவித்துள்ளது.

சவுதி அரேபியாவும் வெளிப்டையாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்குவதாக கூறினாலும் அமெரிக்காவை எதிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமா என்பது தெளிவில்லாமல் உள்ளது.

துருக்கி பாலஸ்தீனத்திறகு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. ஆனாலும் அமெரிக்கா எதிர்த்து ஹமாஸ் போராளிகளுக்கு உதவுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

லெபனால் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பு காசாப் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் களமிறங்கினால் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக யுத்தளகத்தில் இஸ்ரேலுக்குள் நுழைவோம் என்று கூறியதுடன் மட்டு மில்லாமல் சிரியா எல்லையில் தங்களது போராளிகளை சண்டைக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறது. இப்போராளி அமைப்பில் 150,000 போராளிகள் உள்ளனர்.

ஏமனில் இயங்கும் ஹவுத்தி படைகளும் பாலஸ்தீனத்திறகு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களது படைகளும் இஸ்ரேலுக்கு எதிராகப் போர் செய்யத் தயார் என அறிவித்துள்ளதுடன் இஸ்லாமிய ஜிகாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க படைகள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடத்திவரும் ஈராக் அரசியில் கட்சி மற்றும் போராளிகள் குழுவான Asa'ib Ahl al-Haq இஸ்ரேலுக்கு எதிராகப் போர் செய்யத் தயாராக உள்ளது அறிவித்துள்ளது. இவர்களிடம் 5 இலட்சம் உறுப்பனர்கள் பரந்து காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது ரஷ்யாவின் துணை இராணுவ படைகளில் ஒன்றான செச்சென் பிரிவு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து அவசியமெனில் பாலஸ்தீனத்தில் சண்டை செய்வோம் என அறிவித்துள்ளது.

ஈரான், சிரியா நாடுகள் வெளிப்படையாக அறிவிக்காமல் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஈரானே இப்பகுதியில் இள்ள ஹமாஸ் , ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆயுததளபாட உதவிகளை வழங்கி வருகிறது.

No comments