ரணிலை திட்டுகிறார் சி.வி!இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளதாக சி.வி.விக்கினேஸ்வரன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்து தனிப்பட்ட ரீதியில் கடிதமொன்றினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

கடிதத்தில் வாக்குறுதி அளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாகாண சபைகள் தொடர்பில் கலாநிதி விக்னேஸ்வரனின் கீழான ஆலோசனை சபையை அதிகாரத்துடன் செயல்பட வைக்கும் ஏற்பாடு நடைபெறவில்லை.ஆளுநர் மாற்றம் நடக்கவில்லை. அதே ஆளுநர் மாறாமல் தொடர்கிறார்.

வடக்கு மாகாண பிரதம செயலாளரும், மாகாண சுகாதார பணிப்பாளரும் பதவிகளில் தொடர்கின்றனர்.

எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் தாமதமடைவதற்கு  தமிழர்களின் ஆதரவும் வாக்கும் தேவையில்லை என கருதினால், நீங்கள் அதனை வெளிப்படையாக எங்களுக்குக் கூறலாம். நாங்களும் எங்கள் தரப்பினருக்குத் தொடர்ந்து நம்பிக்கை ஊட்டத் தேவையில்லை" எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வடகிழக்கு இணைந்த மாகாணசபையில் அங்கம் வகித்த கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையில் ஓர் ஆலோசனைச் சபையே மாகாண சபை நிர்வாகத்தை ஆளுநருடன் சேர்ந்து முன்னெடுக்கத்தக்க வகையிலான ஓர் ஏற்பாட்டுக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் தரப்புடன்; ரணில் விக்கிரமசிங்க இணங்கினார் என்று கூறப்படுகின்றது.


No comments