மலிவாக விசா இன்றி படகு சேவை?இலங்கைக்கான நாகப்பட்டினத்திலிருந்தான கப்பல் சேவை பற்றிய பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் அச்சேவை காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக நாட்டிற்கு திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வடக்கு பகுதியைசேர்ந்தவர்கள் எனவும்  தமிழகத்திற்கு சென்று 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்திய மீனவர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்த  நிலையில் தகவல் ஒன்றின் அடிப்படையில் பருத்தித்துறை காவல்துறையினரால் நேற்று (10)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

துற்போது பலாலியிலிருந்தான சென்னைக்கான இருவழி விமான சேவை கட்டணமாக இலங்கைப்பணத்தில் 62ஆயிரம் அறவிடப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தற்போது கப்பல் சேவை கட்டணமாக அதனை அண்மித்ததாக 52ஆயிரம் அறவிப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது..


No comments