தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு


இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏன் – மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேட் பெண்டோர் (Dr. Naledi Pandor) ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது முதலாவதாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏன் – மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பில் பொருளாதார மீட்சி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான சட்டமூலம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம் மற்றும் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் உள்ளிட்ட சட்டவாக்க செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

No comments