வவுனியாவில் விபத்து ; பெண் உயிரிழப்பு


வவுனியா பம்பைமடு பகுதியில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குருக்கள புதுக்குளத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான விஜயரத்தினம் ஜெயந்தினி (வயது 44) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது இவருடன் பயணித்த இவரது மகனான சிங்றோஜன் (வயது 22) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments