கோத்தா அருகே செல்ல மறுத்த சந்திரிகா?



முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தான் கோத்தாபய அருகில் அமர்வதை விரும்பாது அருகிலுள்ள மேசையை தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 சீன மக்கள் குடியரசின் 74ஆவது ஆண்டு நிகழ்வு கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இலங்கையின் சீனத் தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. இதில் சந்திரிகா பண்டாரநாயக்க ரணதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்ரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அதாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதிகளில் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் இவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் நால்வருக்கும் ஒரே மேசையில் அமர்வதற்கான நான்கு நாட்காலிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. எனினும்

இலங்கைக்கான சீனத் தூதுவர் கியு சென்ஹொங் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் மிக முக்கிய பிரமுர்கள் வரிசையில் இந்த நால்வரே பிரதானமாக இடம்பிடித்திருந்தனர்.

சீனத் தூதுவர் இந்த நால்வரின் ஆசனங்கள் குறித்து அதிக சிரத்தை எடுத்ததாகத் தெரிகின்றது. எனினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு அருகில் கோத்தாபயவின் ஆசனம் இருந்ததால் சந்திரிகா அவர் அருகில் அமர்வதை விரும்பியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நல்லாட்சி காலத்தில் ரணில் மற்றும் மைத்ரியுடன் இணைந்து பயணித்த சந்திரிகா இடையில் மைத்ரி மகிந்தவை திடீரென பிரதமராக்கி நாடாளுமன்றத்தை கலைத்தவுடன் அவரை கடுமையாக விமர்சித்திருந்தமை முக்கிய விடயம்.

எனினும், சுதந்திர கட்சியின் தலைவராக அந்நேரம் மைத்திரி இருந்த காரணத்தினால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதேவேளை தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்த மகிந்தவும் அதன் பிறகு சந்திரிகாவை ஓரங்கட்டிவிட்டு சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார்.

கோத்தாபய ஜனாதிபதியாவதை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தவர் சந்திரிகா. அவர் இடையில் நாட்டை விட்டு வெளியேறியவுடன் ஜனாதிபதி பதவிக்கே இழுக்கு ஏற்படுத்தியவர் என சந்திரிகா ஒரு சந்தர்ப்பத்தில் கோத்தாபயவை விமர்சித்திருந்தார்.

கூறப்போனால், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த, மைத்ரி, கோத்தாபய ஆகிய மூவர் மீதும் சந்திரிகா வெறுப்புடனேயே இருக்கின்றார்.


எனவே, அன்றைய நிகழ்வில் இந்த மூன்று பேருடனும் அமர்வதற்கு அவர் விரும்பியிருக்கவில்லையென்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments