இடம்பெயரும் மக்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்: 70 பேர் பலி!!


காசாவின் வடக்குப் பகுதியிலில் இருக்கும் 1.1 மில்லியன் பாலஸ்தீனியர்களை தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் 24 நேர காலக்கெடுவை விதித்தது. அத்துடன் வான்வழியால் துண்டுப் பிரசுரங்களையும் வீசினர்.

இந்த அறிவித்தலைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் தெற்கு நோக்கிச் சென்ற மக்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இடம்பெயர்ந்த மக்கள் மீது இஸ்ரேலிய வான்படையினர் நடத்திய தாக்குதலில்  70 பொதுமக்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என ஹமாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முற்றுகையிடப்பட்ட காசா பகுதியை ஆளும் பாலஸ்தீனக் குழுவான ஹமாஸின் ஊடக அலுவலகம், காசா நகரிலிருந்து புறப்படும் கார்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட 70 பேரில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் எனத் தெரிவித்தனர்.

இந்த இடம்பெயர்வு ஐக்கிய நாடுகள் சபையால் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் இது சாத்தியமற்றது எனவும் கூறியது.

No comments