செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி !

 


இன்று காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். .

1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக செல்வராசா தெரிவாகியிருந்தார்.

2000ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொன்.செல்வராசா வெற்றிடத்திற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மரணிக்கும் வரை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவராகவும், மத்தியகுழு, அரசியல் குழு உறுப்பினராகவும் பொன்.செல்வராசா செயற்பட்டு வந்திருந்தார்.

எனினும் அண்மைக்காலமாக தீவிர அரசியல் செயற்பாடுகளில் இருந்து செல்வராசா ஒதுங்கியே இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments