துன்னாலை:ஏட்டிக்குப்போட்டி வாள்வெட்டுக்கள்

 




வடமராட்சி துன்னாலை குடவத்தைப் பகுதியில் உள்ள கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துன்னாலை பகுதியில் சில வாரங்களுக்கு முன்னர் பல்வேறுபட்ட வாள்வெட்டுச் சம்பவம் நடைபெற்றது. இதில் தற்போது வாள் வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவரை வாளால் வெட்டி தாக்கிய நிலையில் நெல்லியடி பொலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 இந்நிலையில் கோயிலுக்குள் உறங்கிக் கொண்டிருந்த போது முன்னர் வாளால் தாக்கப்பட்ட இளைஞனும் இன்னொரு இளைஞனும் வருகைதந்து தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

No comments