நெடுந்தீவு விற்பனை:டக்ளஸே முடிவு!
இந்திய இலங்கை அரசுகளால் இணக்கம் காணப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை இலங்கை அரசு இறுக்கமாகவே பின்பற்றுமென நம்புவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஜயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்
கச்சதீவு விவகாரமானது, 1974, 1976 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானதாக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம், பாண்டிச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளின் நாடாளுமன்ற ஆசனங்களை இலக்குவைத்தே இவ்விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றது.
காலத்துக்கு காலம் தேர்தல்கள் அண்மிக்கின்ற சமயங்களில் இந்தியாவில் பேசுபொருளாக வலம் வருவது வழமையான ஒரு விடயம்.
அவ்வகையிலேயயே இப்போதும் இவ்வாறான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் பிரதமர் தினேஸ் குணவர்த்தன இந்திய ஊடகத்துக்கு தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் பரவினாலும் கடற்றொழில் அமைச்சரின் முடிவே இறுதியானதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
அவ்வகையில் வடக்கு கடற்பரப்பினை இந்திய மீனவர்களிற்கு வாடகைக்கு விடுவதென்ற விவகாரம் ஊதிப்பெருப்பிக்கப்படுவதாகவும் ஜயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment