யாழில். குப்பைக்கு தீ வைத்த பெண், தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழப்பு


வீட்டில் குப்பைக்கு தீ மூட்டிய போது எதிர்பாராத வகையில் ஆடையில் தீ பற்றியதில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுகந்தன் தயாபரி (வயது 37) எனும் பெண்ணே  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 7ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் வீட்டில் இருந்து குப்பையினை மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்திய போது அவரது ஆடையில் தீப்பற்றியுள்ளது. 

காற்று வீசும் திசையில் நின்று இவ்வாறு குப்பைக்கு தீ மூட்டியமையே இதற்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No comments