புதைகுழிக்கு காசில்லையாம்?

 


நிதி நெருக்கடியை காரணங்காட்டி கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  தெரிவித்துள்ளார்.

மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பிலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட 17 உடற்கூற்றுக்கான பரிசோதனை முடிவுகள் தொடர்பிலும் முடக்க நிலையே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் போதிய நிதி ஒதுக்கீடு அகழ்வு பணிகளை முன்னெடுக்க இல்லையென தெரிவித்துள்ளார்.அதனால் அகழ்வு பணிகளை நிறுத்தக்கூடிய சூழலே காணப்படுவதாகவும் , உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகளே காணப்படுவதாகவும் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா  தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தை கையாண்ட முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில்   புதன்கிழமை (04) இரவு தமிழ் தேசிய கட்சிகளது பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். 

அடுத்த கட்ட போராட்டம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்து  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  தொடர்பிலான அறிவிப்பை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக முல்லைதீவு நீதிபதிக்கு நீதி கோரி   யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் புதன்கிழமை (04)   முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.No comments