பதுங்கியிருக்கிறாராம் மனோ??



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதும், கொலைக்கு உத்தரவிட்டது யார் என்பதும் சம்பந்தமாக அம்பலப்படுத்தப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும்; முழுமையான தகவல்கள் வரும் வரையில் பொறுத்திருக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையில் "இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் முன்னாள் செயலாளர் என்று சொல்லக் கூடிய ஆஸாத் மௌலானா உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மட்டுமல்லாமல் பல்வேறு விடயங்களைப் பகிரங்கமாக கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு படுகொலை என்பது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது. ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து செயற்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் பல்வேறு கருத்துக்களையும் ஆஸாத் மௌலானா கூறியிருக்கின்றார்.

எனக்கு வந்திருக்கும் தகவலிலே நண்பர் ரவிராஜைக் கொலை செய்தது யார், கொலைக்கு உத்தரவிட்டது யார், அதிலும் முதல் உத்தரவு கடைசி உத்தரவு என உத்தரவுகளை பிறப்பித்தது யார் என்பது சம்பந்தமாக எல்லாம் சொல்லியிருக்கின்றார்.

ஆனாலும் விடயங்கள் தொடர்பில் முழுமையான தகவல்கள் வரும் வரையில் பொறுத்திருக்கின்றேன். அனைத்தும் கிடைத்த பின்னர் முழுமையாக வெளிப்படுத்தத் தயாராகவுள்ளேன் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


No comments