இலங்கை குரங்கு:புடவை கட்ட சொல்கின்றனர்!



சீனா நாட்டிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யவில்லையென மறுதலித்து வந்திருந்த இலங்கை அரசு சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு 100,000 குரங்குகளை அனுப்பும் ஆரம்ப வேலைத்திட்டம் சுற்றாடல் அமைப்புகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.

அதேவேளை வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுப்பதற்காக சுற்றுச்சூழல் அமைப்புகளால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் நடைமுறையில் இல்லை என அரச விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச் சூழல் அமைப்புகளின் ஆலோசனைகள் பயிர்களைச் சுற்றி புடவைகளை தொங்கவிடுவது, தென்னை மரங்களில் தட்டுகள் கட்டுவது போன்ற யோசனைகள் என்றும், அரை ஏக்கர் பயிர்ச்செய்கையை வன விலங்குகளுக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதால், வன விலங்குகளால் பயிர்ச்செய்கை பயிர்கள் நாசமாக்கப்படுவது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரச விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும முயற்சி அம்பலமான போது அதனை அரசு முற்றாக மறுதலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கெதிராக குரல் எழுப்ப தொடங்கியுள்ளார்.


No comments