தமிழரசு :கூண்டோடு மாற்றத்திற்கு சீவீகே ஆதரவு
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் மக்களும் இடையில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிகளை குறைத்து மீண்டும் உத்வேகத்துடன் பயணத்தை முன்னெடுக்க தலைமைத்துவ மாற்றம் அவசியமாகின்றது.
தலைமைத்துவமாற்றம் என்பது வெறுமனே தலைவர் என்கிற தனிநபரை நோக்கிய விடயமாக கருதக்கூடாது. தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மேல்மட்ட நிர்வாகக் கட்டமைப்பிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், வடமாகாண சபையின் அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
“ தமிழ் மக்களின் விடுதலைப் பயணித்தில் பங்கெடுத்து வருகின்ற அரசியல் தரப்புக்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி மூத்த கட்சியாகவுள்ளது.
இந்தக் கட்சியின் அண்மைக்கால அடைவுமட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களும், வாதப்பிரதிவாதங்களும், விமர்சனங்களும் காணப்படுகின்றன.
அந்த வகையில் கட்சியை அடுத்து வரும் தலைமுறையினரின் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால் அணுகுமுறை மாற்றம் அவசியமாக உள்ளது.
எனவே, வெளிப்படைத்தன்மையுடன் கட்சியில் அணுகுமுறை மாற்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் தலைமைத்துவ மாற்றம் அவசியமாகின்றது.
இந்த தலைமைத்துவமாற்றம் என்பது வெறுமனே தலைவர் என்கிற தனிநபரை நோக்கிய விடயமாக கருதக்கூடாது. தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மேல்மட்ட நிர்வாகக் கட்டமைப்பிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதன்மூலமாகவே எமது கட்சிக்கும், மக்களும் இடையில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இடைவெளிகளை குறைக்க முடியும்” என்றார்.
Post a Comment