கேரளாவில் குண்டை வெடிக்கச் செய்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்!!


சாப்பாட்டுப் பெட்டியில் வெடிபொருள் வைத்துவிட்டு, அதனை தானியங்கி மூலம் டொமினிக் மார்ட்டின் வெடிக்கச்செய்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்றை டொமினிக் மார்ட்டின் முகநூலில் வெளியிட்டுள்ளார். சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை என அவர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.

தற்போது கேரளா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது டொமினிக் மார்ட்டின் தான் என கேரள காவல்துறை உறுதிபடுத்தி உள்ளது. சாப்பாட்டுப் பெட்டியில் வெடிபொருள் வைத்துவிட்டு, அதனை ரிமோட் மூலம் மார்ட்டின் வெடிக்கச்செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குண்டுவெடிப்பை நிகழ்த்திய மார்ட்டின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய பொருட்கள், ரிமோட் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மார்ட்டின் கூறிய வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால், இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மார்ட்டின் தனது முகநூலில் பின்வருமாறு கூறுகிறார்:-

என் பெயர் மார்ட்டின். Jehovah Witnesses group-ல் அமைப்பால் நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். நான் ஏன் இந்த செயலை செய்தேன் என்பதை விளக்கவே பேஸ்புக்கில் இந்த லைவ் வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு என்பது தவறானது என உணர்ந்தேன்.

இதன் போதனைகள் நாட்டுக்கு எதிரானது என்பதை நான் உணர்ந்தேன். இதுபற்றி அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். மேலும் தேசவிரோத செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மாறவில்லை. தொடர்ந்து தங்களின் கொள்கைகளை போதித்தனர். இதனை நான் எதிர்க்கிறேன்.

அதோடு இந்த அமைப்பு என்பது தேவையில்லை என்பதையும் நான் முழுமையாக கூறி கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நான் காவல் நிலையத்தில் சரணடைவேன். மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை. இந்த நேரத்தில் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். குண்டு வெடிப்பை நிகழ்த்த நான் எப்படி திட்டமிட்டேன் என்ற விபரங்களை செய்தி சேனல்கள் மற்றுமு் வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது. ஏனென்றால் இது ஒவ்வொரு சாமானியனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் தனது காணொளிப் பதவில் குறிப்பிட்டுள்ளார். 

No comments