கப்பலிற்கு காற்று போனதா?

 



சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பெரும் பிரச்சாரங்களுடன் தொடங்கப்பட்ட நாகை - யாழ்ப்பாணம்(காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை மறுநாளுடன்(20) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய கப்பல் சேவையானது கடந்த(14) ஆம் திகதி ஆரம்பித்திருந்த நிலையில் மறுநாள் (15) கப்பல் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை மறுநாள் அதாவது வரும் 20 ஆம் திகதியுடன் நாகை - யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னராக 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாகை - இலங்கை இடையேயான கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து நாகைக்கும் கப்பல் சேவை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை - யாழ்ப்பாணம் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


No comments