முடக்கம்:பிரச்சாரங்கள் மும்முரம்
எதிர்வரும் 20ம் திகதி வடக்கு கிழக்கு முழுமையாக இடம்பெறவுள்ள பூரண
கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கின் பிரதான நகரங்களில் பிரச்சாரங்களில் ஈடுபடடுள்ளனர்;.
முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்படுவதை கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்பில் வடக்கு கிழக்கு முழுவதும் எதிவரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரும் பிரச்சார நடவடிக்கையில் அரசியல் தலைவர்கள்,வடக்குமாகாண சந்தை வியாபாரிகள் ஒன்றியத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று யாழின் முக்கிய வர்த்தக நகரங்களான திருநெல்வேலி, மருதனார்மடம் பகுதிகளில் ஆரம்பித்த கடையடைப்புக்கு ஆதரவு கோரும் பிரச்சார நடவடிக்கை வடக்கு கிழக்கில் உள்ள முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.
இதனிடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கூறப்படுவதை கட்சி தலைவர்கள் மறுதலித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment