கட்டவுட் வேண்டாம்:கெஞ்சும் ரணில்
ரணிலுக்கு கட்டவுட் வைத்து தனது விசுவாசத்தை காண்பிக்கபோய் கடும் வசவிற்குள்ளாகியுள்ளார் உள்ளுர் பிரமுகர் ஒருவர்.
இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரிய கட்அவுட்டை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
Post a Comment