சாவகச்சேரியில் வீட்டின் மீது இனம் தொியாத கும்பல் தாக்குதல்


யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்குப் பகுதியிலுள்ள வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதால் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த இனம் தெரியாத குழுவினர் வீட்டில் இருந்த பொருட்களை தீ வைத்து எரித்தனர்.

குறிப்பாக மோட்டார் உந்துருளி, தொலைக்காட்சி மற்றும் வீட்டு தளபாடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

சம்பவம் நடந்தபோது, வீட்டில் தாய், மகள் பேரப்பிள்ளைகள் என ஐவர் இருந்துள்ளனர். எனினும் அவர்களுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. அத்துடன் தீ பரவுவதை கண்ணுற்ற அயலர்கள் அவர்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.No comments