போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து


போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை ஊர்காவற்துறை பொலிஸார் மறித்து சோதனையிட்ட போது , சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர். 

அதனை அடுத்து சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சாரதியை பொலிஸார் முற்படுத்திய போது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். 

அதனை அடுத்து , அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ஒருவருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. 


No comments