இஸ்ரேல் - காசா போர்: கடந் 3 நாளில் என்ன நடந்தது!!

  • கடந்த மூன்று நாள் யுத்தத்தில் ஹமாசின் தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 800 பேர் கொல்லப்பட்டுள்ளர். மேலும் 2,243 பேர் காயமைடைந்துள்ளர்.

  • காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 687 பாலஸ்தீனியர் கொல்லப்பட்டுள்ளனர். 3,800  பேர் காயமடைந்துள்ளனர்.

  • மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளர். 90 பேர் காயடைந்துள்ளனர்.

  •  1000க்கு மேற்பட்ட ஹமாஸ் போராளிகளின் உடலங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவற்றை எடுத்துச் செல்லுமாறு இஸ்ரேல் கூறியுள்ளது.

  • இஸ்ரேல் - சிரிய எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தங்களது படையில் குவித்து வருகின்றனர்.

  • ஹமாஸ் அமைப்பு யுத்தத்தை ஆரம்பித்தது. இந்த யுத்தத்தை நாங்கள் முடித்து வைப்போம் என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெட்டினியாகு தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • பெஞ்சமின் நெட்டினியாகுவின் உரைக்கு முதல் ஹமாஸ் அமைப்பினர் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடித்து வைக்கலாம் என்று அறிவித்தனர். இதற்கு இஸ்ரேல் பேச்சுவார்த்தை என்பது இனி கிடையாது இனி யுத்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

  • பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து ஹமாஸ் அமைப்பினரும் பதிலுக்கு செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் நாங்கள் இப்போரைத் தொடங்கி 60 மணிநேரங்கள் கடந்துவிட்ன. எங்களுடைய படைகள் இஸ்ரேல் நாட்டுக்குள் இப்போதும் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எதிரியால் எங்களை எதுவும் செய்ய முடியவில்லை. எங்களுடைய போராட்ட வீரர்கள் தங்களது உயிரைக் கொடுத்தும் எடுத்தும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாங்கள் இஸ்ரேலுடன் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. தொடர்ந்தும் இஸ்ரேலியப்படைகள் வான் வழித் தாக்குதலில் ஈடுபட்டால் தங்களிடம் இருக்கும் 100க்கும் மேற்பட்ட பயணக் கைதிகளை ஒவ்வொன்றாக பொதுவெளியல் அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவோம். அத்துடன் அதை சமூக ஊடகங்களில் வெளியிடுவோம். இவை நாங்கள் போரில் தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல. இது பாலஸ்தீனியர்களின் எதிர்காலத்திற்காக இந்த யுத்தம் எங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது இது இஸ்ரேனின் கைகளில் இல்லை என்று என்று ஹமாசின் கஸ்ஸாம் படைப்பிரின் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

  • இஸ்ரேலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடத்தப்பட்டதாகவும், ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • காசா பகுதியில் இஸ்ரேல் இரவு முழுவதும் தனது மிகப்பெரிய குண்டுவீச்சை தொடர்கிறது. இஸ்ரேலிய ஷெல் தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட்டதை ஹெஸ்பொல்லா உறுதிப்படுத்துகிறது. மேலும் இஸ்ரேலில் இராணுவ இலக்குகளுக்கு பதிலடி கொடுத்ததாக கூறுகிறது.

  • தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் அதன் துணைத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த சண்டையில் குறைந்தது நான்கு ஹிஸ்புல்லா போராளிகளும் கொல்லப்பட்டனர்.

  • ஹமாஸ் தாக்குதலில் 11 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

  • அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல்தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றன. இஸ்ரேலின் மனித நேயத்திற்கு எதிரான போர்க் குற்றங்களை ஆதரரிக்கின்றன.

  • இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரான்  உடந்தை என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆனால் வாஷிங்டனில் தெஹ்ரான் தாக்குதலுடன் தொடர்புபடுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறது.

  • பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் உரையாடினார். சவூதி அரேபியா பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்று கூறுகிறது.

  • காஸா மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு தொடர்கிறது. பாலஸ்தீனிய பிரதேசத்தின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு, தெற்கு நகரமான கான் யூனிஸை குறிவைத்து ஏராளமான வான்வழித் தாக்குதல்களுடன் இரவு முழுவதும் தொடர்ந்தது.

  • நான்கு பாலஸ்தீனிய ஆம்புலன்ஸ்கள் மீது எறிகணைகளை வீசி தாக்கியழித்துள்ளன.

  • மத்திய தரைக்கடலில் விமானம் தாங்கிக் கப்பல்களுடன் இஸ்ரேலுக்காக களமிறங்கியுள்ள அமெரிக்கா இஸ்ரேலில் தரைப்படைகளை களமிறக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

  • பாலஸ்தீனியர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதியை நிறுத்த வேண்டும் என்று அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கொண்டு வந்த தீர்மானத்தை அயர்லாந்து எதிர்துள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் செய்த செயலுக்காக ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களைத் தண்டிக் முடியாது என்று கூறியுள்ளது. அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன அதிகாரசபைக்கான உதவிகளை நிறுத்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பாலஸ்தீனிய மக்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுகளை வீச்சு, பள்ளிகள், மருத்துவமனைகள், மசூதிகள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளை தகர்த்துள்ளது. உணவு, மருத்து, நீர், மின்சாரம், எரிபொருள், தொலைத் தொடர்பு, இன்ரநெட் என மனித நேயத்திற்கு எதிரான போர்க் குற்றங்களை இஸ்ரேல் செய்துள்ளது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, யேர்மனி போலந்து போன்ற நாடுகள் பச்சைகொடி காட்டியுள்ளன.

  • காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், டிரோட் ஆகிய 3 நகரங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் போராளிகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் இடையே பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

  • இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையிலான போரின் போது மூன்றாவது நாடு ஏதாவது களமிறங்கினால் ரஷ்யாவும் இஸ்ரேலுக்குள் களமிறங்கும் என ரஷயா எச்சரிக்கை என மேற்கு நாடுகளுக்க எச்சரிக்கையை மறைமுகமாக விடுத்துள்ளது. அதாவது பாலஸ்தீனத்திற்கு ஆரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கினால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தாக்குதலை நடத்தும் என்று கூறியிருந்தது. அப்படி ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தாக்குதலை அமெரிக்கா நடத்தினால் ஈரான் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக களமிறங்க வாய்புள்ளது. அல்லது ஈரானுக்கு எதிராக தாக்குதல் நத்தினால் ரஷ்யா இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக தாக்குதலை நடத்தும் என்பதை நேரடியாகச் சொல்லாம் மறைமுகமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • காசாவில் இருந்து இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இன்று இஸ்ரேல் வான்படையினர் நடத்திய ஆறாவது தொடர் வான்தாக்குதலில் குண்டு வீசி தரைமட்டமாக்கப்பட்டது. அத்துடன் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டது.

  • காசாப் பகுதியில் உள்ள கமாஸின் இலக்குகளை மையப்படுத்தி இஸ்ரேலிய வான் படையின் மிக மூர்க்கத்தனமாக வான்வழித் தாக்குதலைகளை நடத்தினர். 35 தொடக்கம் 45 வரையிலான போர் விமானங்கள் காசாவின் 1600 இலக்குகள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. 

  • காசா எல்லைப்பகுதிகளை மீண்டும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. காசாவின் நிலப்பரப்புக்குள் தரைவழித்தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராக 1 இலட்சம் படையினர் காசாமுனை எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.

  • காசாப் பகுதியில் வாழும் 2.3 மில்லியன் மக்களுக்கு வழங்கப்பட்ட உணவு, மருந்து, மின்சாரம், தண்ணீர், தொலைத் தொடர்பு, இன்ரநெட் வசதிகள் முற்றாகத் துண்டித்துள்ளது இஸ்ரேல்.

  • இஸ்ரேலில் ஒன்பது அமெரிக்கர்கள் உயிரிழந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எங்கள் இஸ்ரேலிய பங்காளிகளுடன் குறிப்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8 பேர் காயமடைந்தனர். மேலும், தங்கள் நாட்டினர் 12 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைகைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

No comments