வவுனியாவில் விபத்து - பொலிஸ் அதிரடி படையினர் இருவர் உயிரிழப்பு
வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிரடி படையினர் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , 06 படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு 09.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மடுகந்தை பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த பொலிஸ் விசேட அதிரடி படையினரின் ஜீப் ரக வாகனம் வெளிக்குளம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வாகனத்தில் இருந்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன் , 06 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment