ஜனாதிபதித் தேர்தலை பிற்போட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும்


ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சித்தால், அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவ மேலும் தெரிவிக்கையில்

” அடுத்தாண்டு, நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். அரசமைப்புக்கு இணங்க, இதனை காலந்தாழ்த்த ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக, எமது தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் குரல் வெகுவாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால்தான், சமூக ஊடகங்களை ஒடுக்க அரசாங்கம் முற்படுகிறது.

நாடு பூராகவும் வைபை வசதிகள் செய்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்த ஒருவர் ஜனாதிபதியாக உள்ள இந்த நேரத்தில், இவ்வாறான சட்டமூலங்கள் கொண்டு வரப்படுகின்றமையை நினைத்து நாம் கவலையடைகிறோம்” என கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

No comments