இஸ்ரேல்-காசா போரில் குறைந்தது 27 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!!

இஸ்ரேஸ் - காசா போரில் குறைந்தது 27 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ)  தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்கள் தரப்பில் 22 பேரும், இஸ்ரேலியத் தரப்பில் 4 பேரும், லெபனான் தரப்பில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போரில் 8 ஊடகவியலாளர்கள்  காயமடைந்துள்ளனர். அத்துடன் 9 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர் என்று ஊகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் நெருக்கடி காலங்களில் முக்கியமான பணியைச் செய்யும் பொதுமக்கள் என்றும், போரிடும் கட்சிகளால் குறிவைக்கப்படக்கூடாது என்றும் CPJ வலியுறுத்துகிறது

No comments