சம்பந்தனின் பதவிக்கு இலக்கு வைத்துள்ள சுமந்திரன்


நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் பதவியை கையகப்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி முனைகிறார் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ. ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற வேண்டும் என தீர்மானிப்பது அவர்களின் கட்சியின் தீர்மானம். அதனை அவர்கள் கட்சிக்குள் பேசி தீர்மானிக்க முடியும். அவ்வாறு செய்ய முடியும் என்பது ஒரு ஜனாதிபதி சட்டத்தரணிக்கு தெரியும். 

அவ்வாறான சூழலில் பொது வெளியில் ஊடகங்கள் ஊடாக சம்பந்தனுக்கு வயது முதிர்ந்து விட்டது. அவர் பதவி விலக வேண்டும் என கூறி கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அதன் ஊடாக சம்பந்தனின் பதவியை , சுமந்திரன் இலக்கு வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தார். 

No comments