யாழில். பிறந்து 20 நாளான குழந்தையின் தாய் உயிர்மாய்ப்பு


குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட பால் சுரக்கவில்லை என மன விரக்தியில் 20 நாள் குழந்தையின் தாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த க. கிருஷ்ணபவானி (வயது 40) என்பவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் குழந்தை பாக்கியமற்ற நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளது. 

அந்நிலையில் குழந்தைக்கு பால் ஊட்ட தாய்ப்பால் போதிய அளவு சுரக்காத நிலையில் கடுமையான மன அழுத்தில் காணப்பட்ட அவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். 

No comments