கொலையா? விபத்தா?கிளிநொச்சியில் நேற்றைய தினம்(14) காணாமல் போன இலங்கை காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இன்று(15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மலையாளபுரம் புது ஜயன்கன்குளம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக 4 காவல்துறையினர் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் காவல்துறையினரைக் கண்டு குளத்திற்குள்ளாக தப்பி ஓடிய போது, அவர்களை காவல்துறையினர் தனித்தனியாக ஒவ்வொரு வழியாக துரத்திச் சென்றுள்ளனர்.

இறுதியில் மூன்று காவல்துறையினர் திரும்பிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

அவரை நேற்றைய தினம் இராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடிய போதும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இநநிலையில் இன்று குளத்திற்குள் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடுதலை மேற்கொண்டதில் காணாமல் போன காவல்துறை உத்தியோகத்தர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் லியனகே சத்துரங்க என்பவரே இறந்துள்ளதாக தெரியவருகின்றது.


No comments